sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கவுரவ விரிவுரையாளர்கள் சைதையில் முற்றுகை

கவுரவ விரிவுரையாளர்கள் சைதையில் முற்றுகை

கவுரவ விரிவுரையாளர்கள் சைதையில் முற்றுகை


UPDATED : ஏப் 23, 2025 12:00 AM

ADDED : ஏப் 23, 2025 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2025 12:00 AM ADDED : ஏப் 23, 2025 11:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனரகத்தை நேற்று, பல்வேறு ஊர்களிலிருந்து வந்த கவுரவ விரிவுரையாளர்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து உள்ளே செல்ல விடாமல் தடுத்து வெளியேற்றினர்.

பின், அங்கிருந்து மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை முற்றுகையிட வந்தனர். அங்கும், போலீசார் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்திருந்தனர்.

செமஸ்டர் தேர்வுக்காக மாநிலக்கல்லுாரி நுழைவாயில் திறந்து இருந்ததால் அங்கு நுழைந்த கவுரவ விரிவுரையாளர்கள், அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். சம்பவம் அறிந்துவந்த திருவல்லிக்கேணி போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, சமூக நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.

அப்போது, தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us