sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 31, 2026 ,பங்குனி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

/

வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி

வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி


UPDATED : மார் 31, 2026 12:27 PM

ADDED : மார் 31, 2026 12:28 PM

Google News

UPDATED : மார் 31, 2026 12:27 PM ADDED : மார் 31, 2026 12:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கத்தில் உள்ள, அவர் ஏஞ்சல் பள்ளியில் கணினி அறிவியல் படிக்கிறேன். 'சைபர் செக்யூரிட்டி' படிக்க விரும்புகிறேன். படிப்பு மட்டும் போதாது, திறன்களை கற்க வேண்டும் என்பது, இங்கே வந்த பிறகே தெரியவந்தது.
- எஸ்.அபர்ணா, வளசரவாக்கம்.

பி.டெக்., சி.எஸ்.சி., படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். வழிகாட்டி நிகழ்ச்சி வாயிலாக, சி.எஸ்.சி., படிப்போடு தொடர்புடைய வேறு சில படிப்புகளையும் தெரிந்து கொண்டேன்.
- பி. பெஞ்சமின், வேளச்சேரி.

திருத்தங்கல் நாடார் வித்யாலயாவில், 'பயோ மேத்ஸ்' படிக்கிறேன். இ.சி.இ., படிக்க முடிவு செய்துள்ளேன். இங்கு, ஜே.இ.இ., மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்த தெளிவு கிடைத்தது. ஜெயப்பிரகாஷ் காந்தி கூறிய ஏ.ஐ., குறித்த தகவல்கள் பயனளித்தன.
- கு.ஜீவிதா, திருவொற்றியூர்.

'நீட்' தேர்வு எழுதி டாக்டர் ஆவதே என் லட்சியம். அது குறித்த பல தெளிவுகள் வழிகாட்டியில் கிடைத்தன. நிகழ்கால கல்வி நிலையங்கள் குறித்த நடைமுறைகளை, அஸ்வின் போட்டுடைத்தது பிடித்தது.
- தருணிகா, திருவொற்றியூர்.

மதுராந்தகத்தில் உள்ள வி.ஜி.என்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 15 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக உள்ளேன். எட்டு பிளஸ் 1 மாணவர்கள் வந்துள்ளனர். பிளஸ் 2வில் எப்படி நம்மை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக அழைத்து வந்துள்ளேன்.
- ஜி.பாலகுரு, 34, மதுராந்தகம்.






      Dinamalar
      Follow us