UPDATED : நவ 22, 2025 10:25 AM
ADDED : நவ 22, 2025 10:26 AM

சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற உள்ளது.
இதற்கான முதற்கட்டத் தேர்வு ஜூன் 15 அன்று நடைபெற்றது. அடுத்த கட்டமாக நடைபெறும் முதன்மைத் தேர்வு சென்னை மையங்களில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இணையதள முகவரிகள்:
www.tnpsc.gov.in, www.tnpscexams.in தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்ய டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

