படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு
படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு
UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM
ADDED : ஜூலை 19, 2025 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின மாணவி, தலைமையாசிரியையாக பதவியில் அமர்ந்ததற்கு ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார்.
பின், ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.
இவரை, சக ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.