sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளியை போராடி மீட்ட தலைமை ஆசிரியை ஷீலாராணி

/

அரசு பள்ளியை போராடி மீட்ட தலைமை ஆசிரியை ஷீலாராணி

அரசு பள்ளியை போராடி மீட்ட தலைமை ஆசிரியை ஷீலாராணி

அரசு பள்ளியை போராடி மீட்ட தலைமை ஆசிரியை ஷீலாராணி


UPDATED : ஆக 14, 2025 12:00 AM

ADDED : ஆக 14, 2025 03:29 PM

Google News

UPDATED : ஆக 14, 2025 12:00 AM ADDED : ஆக 14, 2025 03:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
பள்ளி நிர்வாகத்தை கவனிப்பது, ஆசிரியர்களை வழிநடத்துவது, மாணவர்கள் நலனை பாதுகாப்பது, பள்ளியின் தரத்தை உயர்த்துவது ஆகியவை தலைமை ஆசிரியையின் முக்கிய பங்காக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் தங்கள் பொறுப்புகளை தட்டி கழித்தாலும், பள்ளி, மாணவர்களுக்கு நன்மை செய்வோர் பலர் உள்ளனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.

பெங்களூரின் மஹாலட்சுமி லே - அவுட்டை சேர்ந்தவர் ஷீலாராணி. இவர், பெங்களூரின் வணிக பகுதியான சிக்பேட்டையில் உள்ள அரசு துவக்க பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். பள்ளி இருக்கும் கட்டடம், பள்ளி கல்வி துறைக்கு சேர்ந்தது என்றாலும், வேறு ஒரு துறையின் மூலம் தனியார் நபருக்கு கட்டடம் குத்தகைக்கு விடப்பட்டது.

ஆவணங்கள் இதுபற்றி அறிந்த ஷீலாராணி, பள்ளி கல்வி துறை மூலம், பள்ளியின் கட்டடத்தை மீட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:


கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளேன். இரண்டு ஆண்டுகளாக சிக்பேட்டை அரசு துவக்க பள்ளியில், தலைமை ஆசிரியையாக உள்ளேன். ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டும் இல்லை. மாணவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்த பள்ளிக்கு வந்த போது, பள்ளியின் கட்டடம் பள்ளி கல்வி துறைக்கு சேர்ந்தது என்றும், ஆனால் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும் தெரிந்தது. இதனால் பள்ளியின் கட்டடத்தை, தனியாரிடம் இருந்து மீட்கும் முயற்சியில் களம் இறங்கினேன். ஓய்வு நேரத்தில் மாநகராட்சி அலுவலகம், பள்ளி கல்வி துறை அலுவலகத்திற்கு சென்று, பள்ளிக்கு தேவையான ஆவணங்களை மீட்கும் முயற்சி செய்தேன். ஒரு வழியாக ஒன்றரை ஆண்டு போராட்டத்துக்கு பின், பள்ளி அரசுக்கு சொந்தமானது என்ற ஆவணத்தை பெற்று, தனியாரிடம் இருந்து பள்ளியை மீட்டு விட்டேன்.

முன்பு இந்த பள்ளியில் நிறைய மாணவர்கள் படித்தனர். தற்போது மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிக்பேட்டை தொழில் பகுதியாக இருப்பது தான். இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு ஏதாவது தொழில் செய்து, சிறு வயதிலேயே பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது.

சில பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். வேலைக்கு செல்லும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்கள் பெற்றோரிடம் பேசி மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து உள்ளேன். எனது தந்தையும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அவரிடம் இருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.







      Dinamalar
      Follow us