கொட்டுது கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கொட்டுது கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:39 AM

சென்னை:
கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், இன்று(டிச.,13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
* விழுப்புரம்
* தூத்துக்குடி
* தென்காசி
* தஞ்சாவூர்
* திருநெல்வேலி
* திருச்சி
* அரியலூர்
* பெரம்பலூர்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
* மதுரை
* திண்டுக்கல்
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
* தேனி
* கரூர்
* கடலூர்
* புதுக்கோட்டை
* மயிலாடுதுறை
* சேலம்
* தருமபுரி
* திருவாரூர்
* நாமக்கல்
* நாகை
* திருப்பூர்
கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.