தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொட்டி தீர்த்தது கனமழை; 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொட்டி தீர்த்தது கனமழை; 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொட்டி தீர்த்தது கனமழை; 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : அக் 21, 2026 10:51 AM

ADDED : அக் 21, 2026 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 10:51 AM ADDED : அக் 21, 2026 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று (அக்., 21) முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதிக மழை எங்கே!

இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:


* வடபழனி - 131 மி.மீ.,

* சைதாப்பேட்டை - 122 மி.மீ.,

* கொளப்பாக்கம் - 121 மி.மீ.,

* ஆலந்தூர் - 115 மி.மீ.,

* வளசரவாக்கம் - 109 மி.மீ.,

* மடிப்பாக்கம் - 107 மி.மீ.,

* மதுரவாயல் - 107 மி.மீ.,

* நெற்குன்றம் - 106 மி.மீ.,

* நுங்கம்பாக்கம் - 105 மி.மீ.,

* அடையாறு - 101 மி.மீ.,

* உத்தரகோசமங்கை - 95 மி.மீ.,

* கொரட்டூர் - 91 மி.மீ.,

* புழல் - 91 மி.மீ.,

* சாலிகிராமம் - 89 மி.மீ.,

* கொளச்சல் - 88 மி.மீ.,

* அத்திப்பேட்டை - 86 மி.மீ.,

* பொழிச்சலூர் - 82 மி.மீ.,

* பாரிஸ் - 81 மி.மீ.,

* அண்ணா நகர் மேற்கு - 79 மி.மீ.,

* கடப்பாக்கம் - 75 மி.மீ.,

* மணலார் அணை - 75 மி.மீ.,

* எழும்பூர் - 74 மி.மீ.,

கனமழை காரணமாக இன்று (அக்., 21) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு:


* சென்னை

* திருவள்ளூர்

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* ராணிப்பேட்டை




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us