UPDATED : ஆக 28, 2024 12:00 AM
ADDED : ஆக 28, 2024 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ல், பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு, மாநில விருது வழங்கப்படுகிறது.
செவித்திறன் மற்றும் பார்வைத் திறனால் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலரான ஹெலன் கெல்லரை, இளம் தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் நோக்கில், இந்த விருதுகளை, ஹெலன் கெல்லர் விருது என்று பெயர் மாற்றி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ளார்.