UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:35 AM
கோவை:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மற்றும் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, நாளை கோவையில் உள்ள 10 மையங்களில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், மொத்தம் 10 வருவாய் துறை ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் எளிதாக தேர்வு மையங்களை அடையும்வண்ணம், அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நிற்கும் வகையில், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 'மே ஐ ஹெல்ப் யூ' என்ற, சிறப்பு உதவி மையம் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல்களுக்கு, 88257 72866 / 94425 01929 / 1077, 0422-2301114 / 2301115 / 2301116 / 2300970 / 94981 81213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.