தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு மரபு நடை பயண களப்பயிற்சி

கல்லுாரி மாணவர்களுக்கு மரபு நடை பயண களப்பயிற்சி

கல்லுாரி மாணவர்களுக்கு மரபு நடை பயண களப்பயிற்சி


UPDATED : அக் 07, 2026 01:17 PM

ADDED : அக் 07, 2026 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:17 PM ADDED : அக் 07, 2026 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை, மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கல்லுாரி மாணவர்கள் பாரம்பரிய மரபுநடை பயணம் மேற்கொண்டனர்.

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால ஆதி வாலீஸ்வரர் கோவிலுக்கு களப்பயணம் சென்றனர்.

அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ஸ்ரீதர் அறிமுக உரை வழங்கினார். சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.

பேராசிரியர் ரமேஷ், விழுப்புரம் நகர வரலாற்று சிறப்புகளையும் ஆதி வாலீஸ்வரர் கோவிலினுடைய கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தையும் படித்து கூறியதோடு, மாணவர்களுக்கு கல்வெட்டுகளை மைப்படிவம் எடுக்கும் பயிற்சியும் அளித்தார்.

வரலாற்று முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துக் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டு, கல்வெட்டு பயிற்சி மற்றும் மைப்படிவம் எடுத்தல் பற்றிய விழிப்புணர்வும் பெற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us