UPDATED : ஆக 10, 2026 03:52 PM
ADDED : ஆக 10, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்வி சேராதவர்களுக்கான வழிகாட்டி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் (ஆக., 11) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,களில் சேர வழிகாட்டுதல்கள், கல்விக்கடன் பெற ஆலோசனை வழங்கப்படும் என சி.இ.ஓ., முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளுக்கு நீண்ட நாட்களாக வராமல் உள்ள மாணவர்களை கண்டறிந்து முகாமில் பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
