UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:44 AM
பெங்களூரு:
ஹிஜாப் அணிந்து எஸ்.எஸ்.எல்.சி., மாணவியர் தேர்வு எழுதுவது குறித்து விவாதம் நடத்தி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. தேர்வில் ஹிஜாப் எனும் முகம், உடலை மறைக்கும் ஆடை அணிந்து மாணவியர் தேர்வு எழுதுவது குறித்து நீண்ட விவாதம் தேவை. அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.
கடன் வாங்கியவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அத்துடன் அபராதத்தை 5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளோம். இந்த மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருந்த சட்ட சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.