UPDATED : ஆக 28, 2026 07:22 PM
ADDED : ஆக 28, 2026 07:23 PM
கோவை:
இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
இதில், இந்துஸ்தான் கல்விக் குழும செயலாளர் சரசுவதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்துஸ்தான் குழுமம் குறித்த வீடியோ காட்சி திரையிடப்பட்டது.
கல்லூரி முதல்வர்கள் ஜெயா மற்றும் நடராஜன் ஆகியோர் கல்வித்தரம், வளாக நடைமுறைகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கினர். கல்வி, வேலைவாய்ப்பு குறித்து, பெற்றோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், தன் கல்லுாரி கால அனுபவங்களை பகிர்ந்ததோடு, தனித்திறன்களை வளர்த்து கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அகில இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில், 18வது இடம் பெற்ற, கல்லூரியின் முன்னாள் மாணவி ஸ்ருதி பங்கேற்று, போட்டித்தேர்வு தயாரிப்பு முறை குறித்து விளக்கினார்.
கல்லூரி டீன்கள், துறைத் தலைவர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.
