UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 11:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:
ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 2ம் நாளாக நேற்று, வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். அதில் பணி நிரந்தரப்படுத்தல்; பணி பாதுகாப்புடன் இடமாறுதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.

