UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 08:29 AM
பிராட்வே:
தமிழ் நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம் 112வது பிறந்த நாள் விழா; திரைப்பட இயக்குனர் சி.வி.ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மணி விழா; கலைமாமணி முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய கலியுகத்தின் கடவுள் நுால் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில், வி.ஜி.பி., குழும தலைவர் சந்தோசம், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீசன், உலக நட்புறவு மையம் தலைவர் மணிலால், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, நடிகை சச்சு ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர்.
விழாவில், நாடக கலைஞர் கோவை அனுராதாவுக்கும் பத்மஸ்ரீ அவ்வை சண்முகம் நாடகச்செல்வம் விருது; திரைப்பட கலைஞர் ஓ.ஏ.கே.சுந்தருக்கும் பத்மஸ்ரீ எம்.கே.ராதா கலைச்செல்வம் விருது வழங்கப்பட்டது.
திரைப்பட இசையமைப்பாளர் வி.தாயன்பனுக்கும், இசைப் பேராசிரியர் டி.ஏ.சம்பந்தமூர்த்தி இசைச்செல்வம் விருது; 'வளரும் அறிவியல்' ஆசிரியர் இ.கே.தி.சிவகுமாருக்கும் நாடக நால்வர் நற்பணி செல்வம் விருது வழங்கப்பட்டன.
மயிலை திருவள்ளுவர் சங்கம் நிறுவனர் சேயோனுக்கு திருவள்ளுவர் குறள்நெறிச்செல்வம் விருது; முத்தமிழ் ஆய்வு மன்றம் செயலர் கவிஞர் ந.பாபுவிற்கு மகாகவி பாரதியார் 'கவிச்செல்வம் விருது; கவிஞர் துருவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் கவிச்செல்வம் விருது; இளங்கோவடிகள் விருது, புலவர் தமிழமுதனுக்கும் வழங்கப்பட்டன.
வில்லிசைவேந்தர் வில்லிசைச்செல்வம் விருது கலைமாமணி பாரதி திருமகனுக்கும்; அன்னை சீதாலட்சுமி அம்மையார் மகளிர் மாமணி விருது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர் செயலர் விஜயாதாயன்பனுக்கும்; இந்திரா கலைவாணன் மங்கையர் திலகம் விருது, எழுத்தாளர் கி.ஈஸ்வரிக்கும், தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ் நினைவாக ஒளிப்பட நாயகன் விருது வி.ஜி.பி.குழுமம் கணேசுக்கும் வழங்கப்பட்டன. விழாவில், மன்ற துணை செயலர் கலைமாமணி டி.கே.எஸ்.புகழேந்தி நன்றியுரையாற்றினார்.