UPDATED : நவ 25, 2025 08:27 AM
ADDED : நவ 25, 2025 08:32 AM
புதுடில்லி:
உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாணவியருக்கான பிரத்யேக விடுதியில் சேர்க்கை துவங்கியுள்ளது.
திமர்பூரில் டில்லி பல்கலை அருகே, பார்வையற்ற மாணவியருக்கான பிரத்யேக விடுதி, 'அடல் த்ரிஷ்டி பெண்கள் விடுதி' 13.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
சமூக நலத்துறையால் நடத்தப்படும் இந்த விடுதியில், உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாணவியர் இலவசமாக தங்கி படிக்கலாம். திருமணம் ஆகாத, 25 வயதுக்குட்பட்ட முற்றிலும் பார்வையற்ற பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவர்.
பகுதியாக பார்வையற்றவர்கள் இங்கு அனுமதி கிடையாது. பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை குழு நடத்தும் நேர்காணலில் அறை ஒதுக்கப்படும். மேலும், விவரங்கள் டில்லி அரசின் சமூகநலத்துறை இணையதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது.

