தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'நீட்' தேர்வை எப்படி எதிர்கொள்ளணும்! மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் 'அட்வைஸ்'

'நீட்' தேர்வை எப்படி எதிர்கொள்ளணும்! மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் 'அட்வைஸ்'

'நீட்' தேர்வை எப்படி எதிர்கொள்ளணும்! மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் 'அட்வைஸ்'


UPDATED : ஏப் 29, 2026 06:03 PM

ADDED : ஏப் 29, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 06:03 PM ADDED : ஏப் 29, 2026 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
'நீட்' தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர், பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை, பல அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இது குறித்து, திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:


தேர்வு அறைக்கு அனுமதிச்சீட்டு, புகைப்படம் எடுத்துச்செல்ல வேண்டும். விண்ணப்பத்தில் பயன்படுத்தியதை போன்ற வண்ண போட்டோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டின் முதல் பக்கத்தில், 'பாஸ்போர்ட் சைஸ்' புகைப்படம், இரண்டாவது பக்கத்தில் அஞ்சல் அட்டை அளவிலான புகைப்படம் ஒட்ட வேண்டும். மாணவர்கள் தங்கள் கைரேகைப்பதிவை முதல் பக்கத்தில் உறுதி செய்ய வேண்டும்.

புகைப்படத்தின் இடப்புறம் மாணவர் கையொப்பம் இட வேண்டும். வலப்புறம் அறை கண்காணிப்பாளர் கையெழுத்திடுவார்; கூடுதலாக ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு உடன் கொண்டு செல்ல வேண்டும்.

அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் சென்றுவிட வேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு முன்னதாகவே (முதல் நாளே) தேர்வு மையத்தைப் பார்வையிட்டு, இருப்பிடத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

தேர்வுக்கு வரும் போது, அனுமதிச்சீட்டுடன் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு இவற்றில் ஒரு ஆவணத்தை எடுத்து செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் நுழையும் முன் 'மெட்டல் டிடெக்டர்' சோதனை நடத்துவார்கள்.

நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனா எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள், உரிய அடையாள அட்டை மற்றும் அவர்களுடன் வரும் 'ஸ்கிரைப்' தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.

மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களுக்கும் அனுமதியில்லை. பெரிய பட்டன்கள் மற்றும் உலோக அலங்காரம் இல்லாத எளிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். பொருட்களைப் பாதுகாக்க தேர்வு மையத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட மாட்டாது என்பதால், தேவையற்ற பொருட்களைத் தவிர்க்கவும்.

தேர்வு அறையில், வினாத்தாளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே 'ரப் ஒர்க்' செய்ய வேண்டும். அறையில் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு இருக்கும் என்பதால் ஒழுங்கீன செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வு முடிந்ததும், விடைத்தாள் மற்றும் அனுமதிச்சீட்டை, கட்டாயம் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.* மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்க 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் மொழிகளில் ஆலோசனை பெறலாம். மேலும், விபரங்களுக்கு neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் அல்லது 011-40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us