தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெக்னாலஜி மாற்றத்துக்கு பொருத்தமாக உயர் கல்வியை மறுசீரமைப்பது எப்படி?

டெக்னாலஜி மாற்றத்துக்கு பொருத்தமாக உயர் கல்வியை மறுசீரமைப்பது எப்படி?

டெக்னாலஜி மாற்றத்துக்கு பொருத்தமாக உயர் கல்வியை மறுசீரமைப்பது எப்படி?


UPDATED : நவ 25, 2026 05:20 PM

ADDED : நவ 25, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:20 PM ADDED : நவ 25, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தேசிய உயர்கல்வி மாநாடு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, மாற்றத்திற்கு ஏற்ப உயர்கல்வியை மறுசீரமைப்பு செய்வது குறித்து தேசிய உயர் கல்வி மாநாடு நடந்ஹது.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில், மெர்லிஸ் ஹோட்டலில் நடந்த மாநாட்டை, புனே சாவித்திரிபாய் பூலே பல்கலையின் இணை துணைவேந்தர் பரக் கல்கார் துவக்கிவைததார்.

அவர் பேசியதாவது:



தொழில்துறையின் தேவைகள் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கேற்ப உயர்கல்வி முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கும், தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

நான்கு ஆண்டு படிப்புகளில், 1 முதல் 1.5 ஆண்டுகள் மாணவர்கள் நேரடியாக தொழில்நிறுவனங்களில் பணியுடன் இணைந்த பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும். அதே போல், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடி பயிற்சி தொழில்துறை நிறுவனங்களில் அவசியம்.

படிப்பை முடிக்கும் போது தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன் கொண்ட மாணவர்களை தயார்படுத்த வேண்டும். குறிப்பாக, மாற்றங்கள், வளர்ச்சிகளுக்கு தன்னை தயாராக வைத்திருக்கும் இளைஞர்களே அவசியம்.

மாணவர்களுக்கு மனிதநேய பண்பு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன், தொடர்பு திறன் இவை மூன்றும் மிக முக்கியம். தற்போதைய கல்வி முறை மாணவர்கள் இயந்திரங்களுடன் இணைந்து வாழும் சூழலை உருவாக்கிவருகிறது. மனிதர்களுடன் இணைந்து மனிதநேயத்துடன் வாழும் பண்புகளே மிக முக்கியம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பல்வேறு தலைப்புகளின் வல்லுநர்கள் விளக்கமளித்தனர். இந்நிகழ்வில், கல்லுாரி அறங்காவலர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். சி.ஐ.ஐ. கோவை மண்டல துணைத்தலைவர் மகாலிங்கம் ராமசாமி, மாநாடு தலைவர் செந்தில் கணேஷ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இயக்குனர் பாலசந்திரன், சி.ஐ.ஐ., கன்வீனியர் சுஜனா அபிராமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us