எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மனித வள மாநாடு
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மனித வள மாநாடு
UPDATED : ஜன 31, 2025 12:00 AM
ADDED : ஜன 31, 2025 10:17 AM

சென்னை:
எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகப்பள்ளி சினர்ஜி: மாற்றத்திற்கான 3டிக்கள்=திறமை தொழில்நுட்பம் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் கடந்த 28ம் தேதி மனித வள மாநாட்டை நடத்தியது.
ஷோகோ நிறுவனத்தின் மனிதவளத் தலைவரான சார்லஸ் காட்வின், வேற லெவல் என்ற தலைப்பில் இலக்கு அமைத்தல், நெட்வொர்க்கிங் மற்றும் சிறிய மைல்கற்களைக் கொண்டாடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
காவேரி மருத்துவமனையின் மனிதவளத் தலைவர் விஷ்ணு பிரியா, இரக்கத்தை மையமாகக் கொண்ட மனித வளம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பணியாளர் ஆரோக்கியம், பன்முகத்தன்மை, உளவியல் முதலுதவி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு வாய்ப்புகள் போன்ற புதுமையான திட்டங்களை அவர் காட்சிப்படுத்தினார்.
ஆச்சி மசாலா புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் தொழில்நுட்பவியல் மற்றும் பணியின் எதிர்காலம் பற்றி விவாதித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு நடைமுறைகளை வலியுறுத்தினார்.
செயின்ட் கோபேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் யுவராஜ் எதிர்காலத்திற்கான உங்கள் திறன்களை மேம்படுத்து என்ற தலைப்பில் வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்.