தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமையாசிரியர்களுக்கு சுகாதாரம் குறித்து பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு சுகாதாரம் குறித்து பயிற்சி

தலைமையாசிரியர்களுக்கு சுகாதாரம் குறித்து பயிற்சி


UPDATED : ஜூன் 26, 2026 04:15 PM

ADDED : ஜூன் 26, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 04:15 PM ADDED : ஜூன் 26, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாணவர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலன் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, மாவட்ட துவக்க கல்வி அலுவலர் ராஜாராம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் பிரதாப், சங்கீதா ஆகியோர் மாணவர்களின் சுகாதரம் மற்றும் உடல்நலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

மாவட்ட துணை இயக்குனர் சித்திரை செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தொழுநோய் குறித்து விளக்கமளித்தார்.வட்டார கல்வி அலுவலர் ஞானவள்ளி பயிற்சி குறித்து விளக்கமளித்தார்.

வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் கனிமொழி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us