தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து


UPDATED : அக் 31, 2025 10:09 AM

ADDED : அக் 31, 2025 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2025 10:09 AM ADDED : அக் 31, 2025 10:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 அதிகாரிகள் ஐந்து பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பதவி காலியிடத்தில், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், சிலருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்படும்.

அந்த வகையில், கடந்த 2023 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், குரூப் - 1 அதிகாரிகளான, கவிதா, முத்துகுமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதி ஆகியோருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us