தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுவதும் ஐ.சி.ஏ.ஐ., பட்டமளிப்பு விழா: 9,057 பேருக்கு சான்றிதழ்

நாடு முழுவதும் ஐ.சி.ஏ.ஐ., பட்டமளிப்பு விழா: 9,057 பேருக்கு சான்றிதழ்

நாடு முழுவதும் ஐ.சி.ஏ.ஐ., பட்டமளிப்பு விழா: 9,057 பேருக்கு சான்றிதழ்


UPDATED : மே 26, 2026 09:16 AM

ADDED : மே 26, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 09:16 AM ADDED : மே 26, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா சமீபத்தில் நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 23 முக்கிய இடங்களில் இந்த விழா ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

மும்பையிலிருந்து காணொளி, மாநாடு மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடக்க விழாவில், இந்தியா முழுவதும் புதிதாக தகுதி பெற்ற 9,057 பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஜனவரி 2026ல் நடைபெற்ற பட்டயக் கணக்காளர் தேர்வுகளில் அகில இந்திய அளவில் தரவரிசை பெற்ற சாதனையாளர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் சல்லா ஸ்ரீநிவாசுலு செட்டி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, ஐ.சி.ஏ.ஐ., தலைவர் சி.ஏ., டி.பிரசன்ன குமார் விழாவில் உரையாற்றியதுடன், புதிதாகப் பட்டம் பெற்றுள்ள இளம் பட்டயக் கணக்காளர்களுக்குத் தொழில்முறைப் பொறுப்புணர்வுக்கான உறுதிமொழியையும் செய்து வைத்தார். மேலும், ஐ.சி.ஏ.ஐ., துணைத் தலைவர் சி.ஏ., மாங்கேஷ் பண்டுரங்க் கினாரே இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், 450 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு அவர்களது உறுப்பினர் சான்றிதழ்கள் முறைப்படி வழங்கப்பட்டன. அத்துடன், தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்து தரவரிசை பெற்ற 10 உறுப்பினர்களுக்குப் பாராட்டுப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பட்டமளிப்பு விழாவின் முழு நிகழ்வுகளையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில், யூடியூப் பக்கத்தின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us