தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்காக உழைப்பேன்

தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்காக உழைப்பேன்

தேர்தலில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்காக உழைப்பேன்


UPDATED : டிச 09, 2024 12:00 AM

ADDED : டிச 09, 2024 08:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2024 12:00 AM ADDED : டிச 09, 2024 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நல்லாயன் பள்ளியில் நடந்த மாணவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், நான் வெற்றி பெற்றால் முன்மாதிரியாக இருப்பேன், ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடப்பேன் என வாக்குறுதி அளித்தனர்.

கோட்டைமேடு, நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாணவர்கள் தேர்தல் நேற்று நடந்தது. இதில், மாணவர் உணவுத் தலைவர், மாணவர் சுற்றுச்சூழல் தலைவர், மாணவர் துணை தலைவர், மாணவர் விளையாட்டு தலைவர், மாணவர் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தலா மூவர் என, 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மா, பலா, வாழை, மரம், இரேசர், சாக்பீஸ், எழுது பலகை, கிரிக்கெட் மட்டை, கால்பந்து, பேனா, புத்தகம், பென்சில் உள்ளிட்ட சின்னங்கள் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில், மாணவர்கள் வரிசையாக சென்று, பெயர் விபரங்கள் சரிபார்த்து, விரலில் மையிட்டு, ஓட்டு சீட்டில் தாங்கள் தேர்வு செய்யும் மாணவர் பிரதிநிதியின் சின்னத்தில் சீல் வைத்து, வாக்குப்பெட்டிக்குள் செலுத்தினர். முன்னதாக, வாக்குப்பெட்டி வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மாணவர்கள் முன்னிலையில் பேசிய வேட்பாளர்கள், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருகை தருவேன். அனைத்து மாணவர்களையும் நல்லமுறையில் பார்த்துக்கொள்வேன். ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து நடப்பேன். வெற்றி பெற்றவுடன் ஆசிரியர்களை போன்று நானும் மாணவர்களுக்காக உழைப்பேன் என, வாக்குறுதி அளித்தனர்.

இன்று தேர்தல் முடிவு!



பள்ளி தலைமையாசிரியர் பிரான்சிஸ் கிளமென்ட் விமல் கூறுகையில், ஏழாவது ஆண்டாக இத்தேர்தல் நடக்கிறது. ஐந்து பிரதிநிதிகளை தேர்வு செய்ய, மாணவர்கள், 166 பேர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் என, 200க்கும் மேற்பட்டோர் ஓட்டு பதிவு செய்கின்றனர். வெற்றிபெறும் மாணவர்கள் பதவியேற்பர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us