தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்

பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்

பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்


UPDATED : மார் 28, 2025 12:00 AM

ADDED : மார் 28, 2025 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2025 12:00 AM ADDED : மார் 28, 2025 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கலை, அறிவியல் எனும் தலைப்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினார்.

அவர் பேசியதாவது:


மொத்த மாணவர்களில், 32 சதவீதத்துக்கும் அதிகமானோர் கலை, அறிவியல் கல்வியை பயின்றுள்ளனர். தற்போதைய காலத்துக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு எதிர்காலம் உள்ளது. வணிகவியல் துறையில் வேலைவாய்ப்புகள் ஏராளம். தடய அறிவியல், டி.என்.ஏ., பகுப்பாய்வு உள்ளிட்டவற்றில் நல்ல எதிர்காலம் உள்ளது.

குறிப்பாக விஷவல் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் திறன்களை வளர்ப்பதன் வாயிலாக நாம் தனித்துவமாக இருக்க முடியும். பெரிய பிரச்னைகளுக்கும் சிறிய அளவிலான தீர்வு இருக்கும். அதை கண்டறிந்தால் போதும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us