சாதிக்க நினைத்து விட்டால் தடை இல்லை; பர்வீன் சுல்தானா பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேச்சு
சாதிக்க நினைத்து விட்டால் தடை இல்லை; பர்வீன் சுல்தானா பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேச்சு
UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 09:53 AM

பெ.நா.பாளையம்:
சாதிக்க நினைத்து விட்டால், நமக்கு எதுவும் தடை இல்லை என, பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில், 62வது ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், சென்னை கல்லூரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகையில்,பள்ளி மாணவர்கள் மைதானத்தையும், நூலகத்தையும் பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நேர நிர்வாகம் அவசியம். அப்போதுதான் நினைத்ததை சாதிக்க முடியும். ஒன்றை சாதிக்க நினைத்து விட்டால், நமக்கு தடை எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களை வெல்வது என்பது ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் பாராட்டை பெறுவது தான். வாழ்க்கையை மாணவர்கள் புரிந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் மாமனிதர் பங்களா ரங்கசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்று பேசினார். எஸ்.பி.ஐ., வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் பாலபத்ரா பட்ருனி சங்கர், சால்சர் குழுமம் நிர்வாக இயக்குநர் துரைசாமி, பள்ளியின் செயலாளர் ஸ்ரீ லதா ஜெகநாதன், அன்னபூர்ணா கவுரி சங்கர் ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.