UPDATED : நவ 13, 2025 07:19 AM
ADDED : நவ 13, 2025 07:20 AM

திருச்சி:
திருச்சி ஐஐஎம் தனது முதலாவது தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது, நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மையையும் கல்வித் தரத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
இந்த அறிக்கை குறித்து இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங் கூறுகையில் “இது ஒரு சாதனை மட்டுமல்ல, நம்பிக்கையின் அறிக்கை. வெளிப்படைத்தன்மை மூலம் எங்கள் மாணவர்களின் திறன்களைப் பற்றிய துல்லியமான நுண்ணறிவை பணியாளர் சேர்ப்பாளர்கள் பெறலாம். இது எங்கள் குழுவின் கூட்டு முயற்சியின் விளைவு,” என்றார்.
கோடைகால வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர் சேர்க்கை நிறுவனங்களும் இருந்தன. முதுநிலை மேலாண்மை பிரிவு மாணவர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரையும், முதுநிலை மேலாண்மை - மனிதவள பிரிவு மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையும் அதிகபட்ச உதவித்தொகை வழங்கப்பட்டது. இறுதி கட்ட வேலைவாய்ப்பு செயல்முறையில் முதுநிலை மேலாண்மை பிரிவுக்கு 189 நிறுவனங்களும், மனிதவள பிரிவுக்கு 40 நிறுவனங்களும் பங்கேற்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

