சென்னை ஐஐடி: ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா ஸ்டெம் பயிற்சி
சென்னை ஐஐடி: ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா ஸ்டெம் பயிற்சி
UPDATED : ஆக 12, 2025 12:00 AM
ADDED : ஆக 12, 2025 11:19 AM

சென்னை:
கல்லூரி ஆசிரியர்களுக்கான ஸ்டெம் (இயற்பியல், வேதியியல், கணிதம்) மற்றும் உயிரித் தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்காக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கற்பித்தல் கற்றல் மையத்தை தொடங்கியுள்ளது.
மாளவியா ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் கீழ், இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, நேரடி மற்றும் இருப்பிடப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி ஆசிரியர்களை இலக்காகக் கொண்ட இந்த திட்டம், போத்பிரிட்ஜ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
பயிற்சி காலம் ஒன்பது நாட்கள்; ஒவ்வொரு குழுவிலும் 50 பேர் பங்கேற்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: https://fundaspring.com/products/capacity-building-stem-faculty-iit-madras-malaviya-mission.