sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புத்தகத் திருவிழா வாசிப்பு இயக்கம் துவக்க விழா

/

புத்தகத் திருவிழா வாசிப்பு இயக்கம் துவக்க விழா

புத்தகத் திருவிழா வாசிப்பு இயக்கம் துவக்க விழா

புத்தகத் திருவிழா வாசிப்பு இயக்கம் துவக்க விழா


UPDATED : ஜன 13, 2026 08:44 PM

ADDED : ஜன 13, 2026 08:46 PM

Google News

UPDATED : ஜன 13, 2026 08:44 PM ADDED : ஜன 13, 2026 08:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகத் திருவிழா வாசிப்பு இயக்கம் துவக்க விழா நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாசிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மாணவர்கள் தினமும் அரை மணி நேரம்பள்ளியில் படிக்கும் புத்தகங்களைத் தவிர பல்துறை புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அது தான் உங்களுக்கு வேலை வாய்ப்புக்கு செல்லும் போது உதவி கரமாக இருக்கும். கிடைக்கும் நேரங்களில் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜன., 25 முதல் பிப்., 4 வரை நடக்கும் 8வது புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

கலெக்டர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் வாசிப்பு உறுதிமொழி எடுத்தனர். கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியார் விக்டோரினா டயஸ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us