கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு துவக்க விழா
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு துவக்க விழா
UPDATED : ஆக 04, 2026 01:10 PM
ADDED : ஆக 04, 2026 01:10 PM
கடலுார்:
கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026 - 27ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புக்கான துவக்க விழா நடந்தது.
கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சியாளர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கினார்.
பின், அவர் பேசுகையில், 'கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேர பட்டய பயிற்சி மிகவும் அவசியம். பயிற்சியாளர்கள் அனைவரும் தனது இலக்கை அடைய முயற்சிப்பது மட்டுமில்லாமல் அதற்கான திறமையையும், கல்வி ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொறுப்பு) நாகலட்சுமி வரவேற்றார்.
துணைப் பதிவாளர் சுகுந்தலதா, இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ராஜமுத்து, விரிவுரையாளர் அன்பரசன் வாழ்த்தி பேசினர். விரிவுரையாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
