தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப பல்கலையில் மாணவர் பேரவை துவக்கம்

தொழில்நுட்ப பல்கலையில் மாணவர் பேரவை துவக்கம்

தொழில்நுட்ப பல்கலையில் மாணவர் பேரவை துவக்கம்


UPDATED : பிப் 07, 2026 10:22 AM

ADDED : பிப் 07, 2026 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 10:22 AM ADDED : பிப் 07, 2026 10:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் கருவி பொறியியல் துறை சார்பில் மாணவர் பேரவை துவக்க விழா 'பியூஷன்' என்ற தலைப்பில் நடந்தது.

விழாவிற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும், விங்ஸ் சஸ்டெய்னபிள் டைரக் ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சரண்யலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து, மாணவர் பேரவையின் செயல்பாடுகள், புதிய உறுப்பினர்கள் அறிமுகம் நடந்தது.

மின்னணு மற்றும் கருவி பொறியியல் துறை தலைவர் ராஜேந்திரன், மாணவர் நலத்துறை டீன் ஞானு ப்ளோரன்ஸ் சுதா, பேரவை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஹேமா குமார், பேரவைச் செயலாளர் ஸ்ரீநிதி, இணைச் செயலாளர் மோகனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us