அவமானப்படும்போதெல்லாம் அவதாரம் எடு; கவிதாசன் பேச்சு
அவமானப்படும்போதெல்லாம் அவதாரம் எடு; கவிதாசன் பேச்சு
UPDATED : அக் 03, 2024 12:00 AM
ADDED : அக் 03, 2024 08:37 AM

கோவை :
கோவை அவினாசிலிங்கம் பல்கலையில், காந்தி ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பல்கலை மாணவியர், காந்தியின் வாழ்க்கை குறித்த உரை நிகழ்த்தினர். துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் இந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன் பேசுகையில், ஒவ்வொருவரும் அவர்களது பிறந்தநாளை எதிர்கால சந்ததியினர் கொண்டாடும் வகையில், வரலாறு படைக்க வேண்டும். அவமானப்படும் போதெல்லாம் அவதாரம் எடு. அவமானப்படுத்துவோருக்கு வார்த்தையால் அல்ல, வாழ்க்கையால் பதில் சொல்ல வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சாதிக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு இவையிரண்டில் ஒழுக்கமே முதலிடம் வகிக்கிறது, என்றார்.
முன்னதாக, பல்கலை பொருளாதாரத் துறை தலைவர் காந்திமதி வரவேற்றார். பல்கலை இணை நிர்வாக அறங்காவலர் கவுரிராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். காந்தி கல்வி மைய தலைவர் ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.