UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:
பொதுத்தேர்வில் சாதித்த, மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அன்னுார் வட்டாரத்தில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அன்னுாரில் நடந்தது.
தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில், மாணவ, மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரவி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.