UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM
ADDED : ஜூலை 21, 2025 08:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த விழாவில், எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் தவணை தொகையாக, 50,000 ரூபாய்க்கான காசோலைகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

