தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9ம் வகுப்பு புத்தகத்தில் 'எமர்ஜென்சி' பாடம் சேர்ப்பு

9ம் வகுப்பு புத்தகத்தில் 'எமர்ஜென்சி' பாடம் சேர்ப்பு

9ம் வகுப்பு புத்தகத்தில் 'எமர்ஜென்சி' பாடம் சேர்ப்பு


UPDATED : ஜூன் 26, 2026 11:16 AM

ADDED : ஜூன் 26, 2026 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 11:16 AM ADDED : ஜூன் 26, 2026 11:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நம் நாட்டில் 1975 - 77ல் அமல்படுத்தப்பட்ட 'அவசரநிலை' குறித்து ஒரு பகுதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில், 1975ம் ஆண்டு ஜூன் 25ல் அப்போதைய பிரதமர் இந்திராவின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவால், 'எமர்ஜென்சி' எனப்படும், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 1977ம் ஆண்டு மார்ச் வரை அமலில் இருந்த அவசர நிலை காலக்கட்டத்தில், மக்களின் உரிமைகள், பத்திரிகை தணிக்கை, தேர்தல் ஒத்திவைப்பு என ஜனநாயக விரோதப் போக்குகள் நிலவின.

இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு, 51 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில், நாட்டில் அவசரநிலை பிரகடணம் செய்யப்பட்டது குறித்த புதிய பாடத்தை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் சேர்த்துள்ளது.

தேசிய கல்வி கொள்கை, 2020ன் கீழ் பள்ளி கல்வியில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகவும், சமகால வரலாறு குறித்து மாணவர்கள் இடையே புரிதலை வலுப்படுத்தவும் இந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

அவசரநிலை காலம் குறித்து விரிவான பாடம், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பின் அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us