UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 10:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்கா கஞ்ச்:
டில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டணத்தை ஒரு செமஸ்டருக்கு 6,000 உயர்த்தியுள்ளதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு நேற்று கூறியுள்ளது.
ஒற்றைப்படை செமஸ்டர்களுக்கு 27,090 ரூபாயிலிருந்து 33,090 ரூபாய் ஆகவும், இரட்டை செமஸ்டர்களுக்கு 26,750 ரூபாயில் இருந்து 32,750 ரூபாய் ஆகவும் உயர்த்தியுள்ளதாக கல்லுாரியின் மாணவர் பிரிவு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மிராண்டா ஹவுஸ் முதல்வர் பிஜயலக்ஷ்மி நந்தா தெரிவித்தார். மற்ற முக்கிய கல்லுாரிகளுடன் ஒப்பிடுகையில், விடுதி வசதிக்காக மிராண்டா ஹவுஸ், மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்ததாகவும் அவர் கூறினார்.