புதுமை படைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்; ஜப்பான் விஞ்ஞானி பாராட்டு!
புதுமை படைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்; ஜப்பான் விஞ்ஞானி பாராட்டு!
UPDATED : செப் 30, 2025 10:39 AM
ADDED : செப் 30, 2025 10:43 AM

டோக்கியோ:
அறிவியல் தொழில்நுட்பத்துறையில், இந்திய - ஜப்பானிய ஒத்துழைப்பு தொடர்பான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஜப்பானிய விஞ்ஞானிகள் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுமை படைப்பது, கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் முன்னேற்றம் காட்டும் உலக நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் 'குளோபல் இன்னவேஷன் இன்டெக்ஸ்' (கில்) என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில், 2014ம் ஆண்டில் இந்தியா 91ம் இடத்தில் இருந்தது. 2020ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா, 48ம் இடத்துக்கு முன்னேறியது. 2025ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 38ம் இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
இதை, ஜப்பானை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான டக்காய் கஜிதா பாராட்டியுள்ளார். இவரும், ஜப்பானை சேர்ந்த 20 பிரபல விஞ்ஞானிகளும் ஒரு தீர்மான அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பதற்கான இந்திய - ஜப்பானிய ஒத்துழைப்பு தொடர்பான மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தி, அந்த தீர்மான அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 'ஆராய்ச்சியிலும், புதுமை படைப்பதிலும், விரைந்த முன்னேற்றம் காண்பதற்கு, இந்தியாவிடம் இருந்து ஜப்பான் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று, டோக்கியோ பல்கலையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், டக்காய் கஜிதா வலியுறுத்தினார்.
யார் இந்த டக்காய் காஜிதா!
இவர், 2015ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி. டோக்கியோ பல்கலையின் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.நியூட்ரினோ ஊசலாட்டம் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.