sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா - தாய்லாந்து ஒப்பந்தம்!

/

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா - தாய்லாந்து ஒப்பந்தம்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா - தாய்லாந்து ஒப்பந்தம்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா - தாய்லாந்து ஒப்பந்தம்!


UPDATED : ஏப் 04, 2025 12:00 AM

ADDED : ஏப் 04, 2025 12:14 PM

Google News

UPDATED : ஏப் 04, 2025 12:00 AM ADDED : ஏப் 04, 2025 12:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்:
இந்தியா - தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி - தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 'பிம்ஸ்டெக்' எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நேற்று சென்றார்.

மோடியை வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரேவுடன், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக, பிரதமர் மோடி பேசினார்.

கூட்டு பிரகடனம்

இந்த பேச்சின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாட்டுக்கும் இடையேயான துாதரக உறவை, பல்துறை ஒத்துழைப்பு உறவாக உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்த கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, குஜராத்தின் லோதாலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டுவது, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துடன், கல்வி, கலாசாரத்தில் இணைந்து செயல்படும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாக, அனைவருக்குமான சட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்துவதில் எப்போதும் ஆதரவாக இருக்க இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துக்கு இடையே சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வியில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகத்தில் பரஸ்பர வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

கலாசார உறவு

இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள பாரம்பரிய, கலாசார உறவுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புத்த மதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ராமாயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் மின் ஆங்க் ஹிலாங்க் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

மியான்மரில் அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதற்காக, ஆசியான் எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்க மின் ஆங்க் ஹிலாங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா தவிர்த்து, கடைசியாக, 2021ல் இந்தோனேஷியாவுக்கு மின் ஆங்க் ஹிலாங்க் சென்றார். அதன் பின், தற்போது தாய்லாந்துக்கு அவர் சென்றுள்ளார்.

திரிபிடகம் புனித நுால் பரிசு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, புத்தரின் போதனைகள் தொகுக்கப்பட்ட திரிபிடகம் புனித நுாலை, தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே வழங்கினார். புத்தரின் பூமியில் இருந்து வந்துள்ள நான், இதை மிகவும் பணிவுடன் பெற்றுக் கொள்கிறேன் என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பல நாடுகளில் இருந்தும், புத்தர் தொடர்பான போதனை தகவல்களை திரட்டி இந்த நுால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, புத்தர் தொடர்பான கல்வெட்டுகள் உள்ளிட்ட தகவல்கள் இந்தியாவில் இருந்தும் அனுப்பப்பட்டன. முன்னதாக, ராமாக்கியென் என்ற தாய்லாந்து ராமாயண நிகழ்ச்சியை, பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

இது போன்ற கலாசார பிணைப்பு வேறெதுவும் இல்லை. ராமாக்கியென் எனப்படும் தாய்லாந்து ராமாயணத்தின் மனங்கவரும் நிகழ்ச்சியை ரசித்தேன். இந்தியா - தாய்லாந்து இடையே பகிரப்பட்ட கலாசார மற்றும் நாகரிக உறவுகளை, உண்மையிலேயே அழகாக எடுத்துக்காட்டிய வளமான அனுபவமாக இது இருந்தது; ஆசியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதயங்களையும் மரபுகளையும் இணைப்பதை ராமாயணம் தொடர்கிறது என, பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us