தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா: பிரதமர் மோடி

தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா: பிரதமர் மோடி

தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா: பிரதமர் மோடி


UPDATED : நவ 23, 2026 12:40 PM

ADDED : நவ 23, 2026 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:40 PM ADDED : நவ 23, 2026 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் முதல் ஐ.ஐ.டி.,யான மேற்கு வங்கத்தின் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடந்த பவள விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

தடைகளை உடைத்து, புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா உலகுக்கு தெளிவாக அறிவித்துள்ளது. மக்களின் மனநிலையில் உள்ள தடைகளை உடைக்கும் போது தான் நாட்டின் திறன்களை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியும். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா இதை நிரூபித்துள்ளது.

வறுமையிலிருந்து, 50 கோடி மக்களை மீட்டுள்ளோம். இதை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையும் தெரிவிக்கிறது. இது சாதாரண சாதனை அல்ல. தடைகளை உடைக்க வேண்டும் என்ற மனநிலையின் விளைவு. முன்பு வறுமையை ஒழிப்பது பற்றி பேசினர்; கோப்புகளை உருவாக்கியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆட்சி என்பது பிறருக்கு அதிகாரம் அளிப்பதற்கான கருவியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அணுகுமுறை. செமிகண்டக்டர் எனப்படும் மின்னணு சிப் தயாரிப்பிலும், விண்வெளி துறைகளிலும் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொழில் தொடங்க முன்வந்தது. அதற்கு சிவப்புக் கொடி காட்டி வெளியேற்றினர். எங்கள் அரசில் செமிகண்டக்டர் திட்டத்தை அறிவித்த போதும், வாய்ப்பை இந்தியா ஏற்கனவே இழந்துவிட்டதாக சிலர் கூறினர். ஆனால், நாங்கள் திட்டத்தை தொடங்கி சிப்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளோம். தனியார் நிறுவனங்களை விண்வெளித் துறையில் பங்கேற்க அனுமதித்தோம். அதனால் இளைஞர்களுக்கும் புதிய தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஐ.ஐ.டி., கரக்பூரின் முன்னாள் மாணவர் பவன் குமார் சந்தனா தொடங்கிய 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு காலத்தில் எதெல்லாம் நம் நாட்டினால் சாத்தியமில்லை எனக் கருதப்பட்டதோ, அவை இன்று நிஜமாகி வருகின்றன. மாட்டு வண்டி காலத்திலிருந்து புல்லட் ரயில் காலத்துக்கும், தபால் கடிதங்களிலிருந்து சமூக வலைதள செய்திகளுக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் நிலையை எட்ட உள்ளோம்.

மாணவர்கள் நாட்டுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஐ.டி., பவள விழாவின் ஒரு பகுதியாக 'வளர்ந்த பாரதத்துக்கான, 75 குரல்கள்' என்ற நிகழ்ச்சியின் கீழ் ஐ.ஐ.டி., கரக்பூரைச் சேர்ந்த 75 சிறந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார். ஐ.ஐ.டி., கரக்பூரின் பவள விழாவைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு வெள்ளி நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us