தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது: பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது: பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது: பிரதமர் மோடி


UPDATED : அக் 16, 2026 04:58 PM

ADDED : அக் 16, 2026 04:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:58 PM ADDED : அக் 16, 2026 04:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஆசிய விளையாட்டு போட்டி சமீபத்தில் ஜப்பானில் நடந்தது. இதில் 21 தங்கம்,27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கம் பெற்று நான்காவது இடம் பிடித்தது. வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் பதக்கங்கள் கிடைத்தன. இந்திய வீரர்களுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கவுரவம்


பதக்கம் வென்ற வீரர்கள் அனைவரும் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடியதுடன் கவுரவித்தார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சாதனை


அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆசிய விளையாட்டு போட்டி எப்போதும் நமது நினைவில் இருக்கும். நமது ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றது. 44 ஆண்டுகளுக்கு பிறகு நமது பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது.

கிரிக்கெட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பதக்கம் வென்று சாதனை படைத்தது. அதேபோல் கபடியிலும் இரு அணிகளும் தங்கம் வென்றது. வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. நமது தடகள வீரர்கள் புதிய சாதனை படைத்தனர் 28 ஆண்டுகளுக்கு பிறகு பளு தூக்குதலில் நமக்கு பதக்கம் கிடைத்தது.

1982க்கு பிறகு மாரத்தானில் இந்தியா சாதனை படைத்தது. நமது மகள்களை பாராட்ட விரும்புகிறேன். இந்தியாவுக்கு கிடைத்த 85 பதக்கங்களில் 38 பதக்கங்களை பெண்கள் பெற்றுக் கொடுத்தனர். அதில் 11 தங்கம். இந்த பதக்கம் என்பது வெறும் எண்ணிக்கை கிடையாது.

அது புதிய இந்தியாவின் வலிமையான பிம்பத்தை காட்டுகிறது. ஆசிய விளையாட்டுகளில் முன்பு பதக்கம் வெல்லாத விளையாட்டுகளிலும் இன்று இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது. இதில் நமது வீரரகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா தனது விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு சூழலுக்கும் ஆதரவு அளிக்க மிகுந்த பொறுமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

கேலோ இந்தியா திட்டத்தையும், விளையாட்டு கூட்டமைப்பை வலுப்படுத்தவும் 36 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இன்று நாடு முழுவதும் கேலோ இந்தியா மையங்கள் திறக்கப்பட்டன. மைதானங்கள், மினி மைதானங்கள்,, விளையாட்டு துறை சார்ந்த அரங்கங்கள் கட்டமைக்கப்பட்டன. தடகள டிராக்குகள், கால்பந்து மைதானங்கள், ஹாக்கி மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.

ஒலிம்பிக்


வரவிருக்கும் விளையாட்டு போட்டிகளுக்கான நமது ஆயுத்தங்களை வலுப்படுத்த வேண்டும். 2028 ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக், 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதோடு, 2036 ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் இந்தியா விரும்புகிறது. அதனை நடத்துவோம் என நம்புகிறோம். திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியானது, நாட்டின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us