இந்தியாவின் முதல் தரவு மையம் ஏர்டெல்லின் என்எக்ஸ்ட்ரா
இந்தியாவின் முதல் தரவு மையம் ஏர்டெல்லின் என்எக்ஸ்ட்ரா
UPDATED : நவ 06, 2024 12:00 AM
ADDED : நவ 06, 2024 05:35 PM
சென்னை:
செயல்திறனை மேம்படுத்தும் விதமாக ஏர்டெல் நிறுவனம் என்எக்ஸ்ட்ரா எனும் ஏஐ தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. இது இக்கோலிபிரியத்தின் ஏஐ-ஆல் இயக்கப்படும் ஸ்மார்ட்சென்ஸ் தளத்தை பயன்படுத்துகிறது.
இப்பயன்பாட்டின் மூலன் உபகரண செயல் திறன் மேம்பாடு, குறைவான மின் நுகர்வு, நிகழ்நேர செயல்திறன் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
ஏர்டெல் என்எக்ஸ்ட்ராவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆஷிஷ் அரோரா கூறுகையில், நிலையான தரவு மையங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளை ஒருங்கிணைக்கிறோம். இக்கோலிபிரியத்துடனான பார்ட்னர்ஷிப் மற்றும் ஏர்டெல் தரவு மையங்களில் ஏஐ இன் ஒருங்கிணைப்பு ஒரு முக்கியமான முயற்சியாக இருக்கும், என்றார்.
இக்கோலிபிரியம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சிந்தன் சோனி கூறுகையில், ஏஐ/எம்.எல் இயங்குதளம் உலகம் முழுவதும் 500 ஸைட்களில் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் என்எக்ஸ்ட்ரா இக்கோலிபிரியத்துடன் உயர்தர செயல்பாடு மற்றும் ஆற்றல் திறன்களைப் பராமரிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், என்றார்.
ஏர்டெல்லின் என்எக்ஸ்ட்ரா (Nxtra) இந்தியாவின் மிகப்பெரிய அறிவாற்றல் மிக்க மற்றும் நிலையான தரவு மையங்களை 120+ இடங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள், ஹைப்பர் ஸ்கேலர்கள், ஸ்டார்ட்-அப்கள், SMEகள் மற்றும் அரசாங்கங்களுக்கு வழங்குகிறது. இந்த நிறுவனம் 2031 ஆம் ஆண்டுக்குள் அதன் தற்போதைய திறனை இருமடங்கான 400 மெகாவாட்டாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.nxtra.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.