தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்: ஓபன் ஏ.ஐ., சி.இ.ஓ., வியப்பு

ஏ.ஐ., துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்: ஓபன் ஏ.ஐ., சி.இ.ஓ., வியப்பு

ஏ.ஐ., துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்: ஓபன் ஏ.ஐ., சி.இ.ஓ., வியப்பு


UPDATED : பிப் 21, 2026 03:00 PM

ADDED : பிப் 21, 2026 03:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2026 03:00 PM ADDED : பிப் 21, 2026 03:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
“ஏ.ஐ., துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் வியக்கத்தக்கது,” என ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென் கூறியுள்ளார்.

ஏ.ஐ., மாநாட்டில் அவர் பேசியதாவது:

கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கு வந்தேன். அதற்கு பிறகு பல மாற்றங்கள் வந்துள்ளன. உயர்நிலை படிப்புகளில் கணிதத்தில் சிரமப்பட்டவர்கள். தற்போது ஏ.ஐ., உதவி உடன் ஆராய்ச்சி அளவிலான கணிதத்தை செய்வதுடன், இயற்பியலில் புதிய முடிவுகளை பெறக்கூடிய அமைப்புகளுக்கு மாற்றிவிட்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக ஏ.ஐ., துறையை பணியாற்ற வைக்கும் பணியில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் என்பது வியக்கத்தக்கது. உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இறையாண்மை கொண்ட ஏ.ஐ., கட்டமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம் மிகவும் சிறப்பானதாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் 10 கோடிக்கும் அதிகமானோர் சாட் ஜி.பி.டி.,யை பயன்படுத்துகின்றனர். அவர்களில் 3 ல் ஒரு பங்கினர் மாணவர்கள்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஏ.ஐ., துறையில் வழிநடத்துவதில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. அதனை உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல், அதனை கட்டமைப்பதிலும், அதில் நமது எதிர்காலம் குறித்தும் முடிவு செய்கிறது. வேகமாக முன்னேறி செல்வது முக்கியமானது. இவ்வாறு சாம் ஆல்ட்மென் பேசினார்.

இதற்கு பிறகு ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

வேலை சந்தையில் நிச்சயம் ஏ.ஐ., தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், நாம் நிச்சயம் புதிய விஷயங்களை ஆராய வேண்டும். சிறப்பான விஷயங்களை கண்டறிய முடியும்.

இந்தியாவில் இருப்பதும், ஏ.ஐ., துறையில் இந்தியாவில் நடக்கும் பணி மற்றும் அதனை ஏற்றுக்கொண்டு உலகிற்கு தலைமை ஏற்று நடப்பதை பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு சாம் ஆல்ட்மென் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us