UPDATED : ஜூலை 20, 2026 10:20 AM
ADDED : ஜூலை 20, 2026 10:24 AM
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த உதய் ருத்தராஜூ நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் ஹைதராபாத்தின் சைதன்யா பாரதி தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் வென்றார். கல்லூரியில் படிக்கும் போதே அவருக்கு அமேசான் வெப் சர்வீஸ் துறையில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது.
இளநிலை பட்டப்படிப்பு முடித்த உடன், அவர் அமெரிக்கா சென்று, மின்னசோடா பல்கலையில் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
இதன் பிறகு இ-பே மற்றும் ராபின்ஹூட் நிறுவனங்களில் பணியாற்றிய அவர் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏ.ஐ., நிறுவனத்தின் உள்கட்டமைப்பு பொறியியல் பிரிவில் தலைவராக இருந்தார்.
கடந்த 2025ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து முக்கியமான நபர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களில் உதய் ருத்தராஜூவும் ஒருவர். அதன் பிறகு ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வந்த அவருக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
