இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : மார் 17, 2025 12:00 AM
ADDED : மார் 17, 2025 09:26 AM

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆட்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர், தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின்மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.