sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து

/

பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து

பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து

பால்கன்-9 ராக்கெட்டில் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா; பிரதமர் மோடி வாழ்த்து


UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM

ADDED : ஜூன் 25, 2025 05:49 PM

Google News

UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM ADDED : ஜூன் 25, 2025 05:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
பல தடைகளை தாண்டி, பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், ஆக்சியம் ஸ்பேஸ் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை மேற்கொண்டது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர்.

பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது.

28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8வது முறையாக இன்று வெற்றிகரமாக பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

முதல் இந்தியர்


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷூ சுக்லா பெற்றார். பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து சுக்லா ஆய்வு செய்கிறார்.


மகிழ்ச்சியான தருணம்


இந்திய விமானப்படை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


சுபஹான்ஷு சுக்லா சிறந்த பயணத்தை மேற்கொள்கிறார். இது ஒரு மைல்கல். இது இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உற்சாகம்



அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன்-9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் கைதட்டி மகிழ்ந்தனர்.

கொண்டாட்டம்

இந்திய வீரர் சுக்லா விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக புறப்பட்டு சென்றதை அவரது பெற்றோர், உறவினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மனமுருகி வேண்டிய படி அமர்ந்திருந்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர், விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்ற அறிவிப்பு வந்ததும் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடினர்.

சுக்லாவுக்கு வாழ்த்துக்கள்!

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: சுபன்ஷு சுக்லா இந்த மிஷனின் மிக முக்கியமான உறுப்பினர். இது இந்தியாவிற்கு பெருமையான தருணம். குரூப் கேப்டன் சுக்லாவுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!

விண்வெளி நிலையத்திற்கு, புறப்படுவதற்கு முன்பு, சுக்லா கூறியதாவது:

நமஸ்காரம், என் அன்பான நாட்டு மக்களே! விண்வெளி நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. 41 ஆண்டுக்கு பிறகு, இந்தியாவின் கொடி விண்வெளியில் பறக்கப்போகிறது.
என்னுடைய இந்தப் பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு தொடக்கமல்ல, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கமாகும். இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நெஞ்சும் பெருமையால் நிறைய வேண்டும். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!
இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி பாராட்டு

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளி பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் பாராட்டுக்கிறோம்.

இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.
அவர் 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் தன்னுடன் சுமந்து செல்கிறார்.

அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us