sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய சிறுவன் சாம்பியன்

/

ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய சிறுவன் சாம்பியன்

ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய சிறுவன் சாம்பியன்

ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய சிறுவன் சாம்பியன்


UPDATED : மே 31, 2025 12:00 AM

ADDED : மே 31, 2025 08:55 AM

Google News

UPDATED : மே 31, 2025 12:00 AM ADDED : மே 31, 2025 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஆங்கில சொற்களை சரியாகக் கூறும், 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் பைசான் ஸகி, 13, சாம்பியன் பட்டத்தையும், 43 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் வென்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ஸ்கிரிப்ஸ், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியை நடத்துகிறது. 1925ல் இருந்து இப்போட்டி நடக்கிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நுாற்றாண்டு விழா.

மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், சொற்களஞ்சியத்தையும், சரியான உச்சரிப்பையும் வளர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்தாண்டுக்கான போட்டி நேற்று நடந்தது. இதில், டெக்சாஸைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான பைசான் ஸகி, 13, சாம்பியன் பட்டம் வென்றார்.

இவருக்கு, 43 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பைசான் ஸகி கடந்தாண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியில், சிறிய தவறால் சாம்பியன் பட்டத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

இவருடன் எட்டு மாணவர்கள் போட்டியிட்டனர். அனைவரையும் விஞ்சி, அனைத்து சிக்கலான ஆங்கில சொற்களையும்குறித்த நேரத்தில் சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us