தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ இந்திய நாட்டிய விழா விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய நாட்டிய விழா விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய நாட்டிய விழா விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : நவ 30, 2024 12:00 AM

ADDED : நவ 30, 2024 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2024 12:00 AM ADDED : நவ 30, 2024 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாமல்லபுரத்தில் நடத்தப்படும், இந்திய நாட்டிய விழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுற்றுலா பயணியரை ஈர்க்க, ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில், இந்திய நாட்டிய விழா நடத்தப்படுகிறது. இதில், நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலத்தின் கலை நிகழ்வுகளை வெளிப்படுத்துவர்.

டிசம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கி, ஜனவரி இரண்டாவது வாரம் வரை ஒரு மாதத்திற்கு நடத்தப்படும் விழாவில், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி, மோகினியாட்டம், பொய்கால் குதிரை, காவடியாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் இடம் பெறும்.

அந்த வகையில் நடப்பாண்டு, இந்திய நாட்டிய விழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பம் உள்ளவர்கள், உரிய சான்றிதழ்களுடன், dotdepartment@gmail.com என்ற, இ- மெயில் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் அல்லது சுற்றுலாத்துறை, 2வது தளம், வாலாஜா சாலை, சென்னை, 600 002 என்ற முகவரிக்கு, டிசம்பர், 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us