UPDATED : நவ 11, 2024 12:00 AM
ADDED : நவ 11, 2024 08:44 AM
கோவை:
ஈச்சனாரி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை, மத்திய காலணிப் பயிற்சி நிறுவனம் (சி.எப்.டி.ஐ.,) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சி.எப்.டி.ஐ., சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் ரத்தினம் கல்லுாரி செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஏ.ஐ., லேர்னிங், கிராபிக் டிசைனர், இன்டர்னல் ஆடிட்டர், சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் மாணவர்களுக்கு தற்போதையை வேலை சந்தையில், அதிக மதிப்பளிக்கும் திறன்களை வழங்குகின்றன.
இது மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரித்து, நவீன தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்வதற்காக மாணவர்களை தயார்ப்படுத்துகிறது. கல்லுாரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன், வர்த்தகத்துறை தலைவர் ஹேமலதா, ராஜேந்திரன், போராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.