UPDATED : டிச 16, 2025 09:08 AM
ADDED : டிச 16, 2025 09:08 AM
பீளமேடு:
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் துறைகள், பி.எஸ்.ஜி., டெக்ஸ் கோ இன்டுடெக் உடன் இணைந்து, ஆறாவது தொழில்துறை ஜவுளி மாநாட்டை நடத்தின. இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீ அஷ்வின் சந்திரன் தலைமை வகித்தார்.
தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம் மிஷன் இயக்குனர் ஸ்ரீ அசோக் குமார் மல்ஹோத்ரா, இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலை இயக்குனர் பிரசாத் பொட்லுாரி ஆகியோர் உரையாற்றினர்.
தொழில்துறை ஜவுளிகள், தயாரிப்புகள், பன்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நடந்த இந்த சர்வதேச மாநாட்டில், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்களைச் சேர்ந்த, 21 பேச்சாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு, துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

