sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எங்கும் புத்தாக்கம்; புதுமையில் சிறந்தால் வாழ்வில் ஆக்கம்

/

எங்கும் புத்தாக்கம்; புதுமையில் சிறந்தால் வாழ்வில் ஆக்கம்

எங்கும் புத்தாக்கம்; புதுமையில் சிறந்தால் வாழ்வில் ஆக்கம்

எங்கும் புத்தாக்கம்; புதுமையில் சிறந்தால் வாழ்வில் ஆக்கம்


UPDATED : ஏப் 07, 2025 12:00 AM

ADDED : ஏப் 07, 2025 09:20 AM

Google News

UPDATED : ஏப் 07, 2025 12:00 AM ADDED : ஏப் 07, 2025 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
உயர்கல்வி வாய்ப்புகள் எனும் தலைப்பில், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா பேசினார்.

திருப்பூரில் நடைபெற்ற தினமலர்-வழிகாட்டியில் அவர் பேசியதாவது:


தகுதித்தேர்வு, போட்டித்தேர்வு வினாத்தாளை படிக்கும் போது நமக்கு விடை தெரிந்து, மனம் சந்தோஷமாக மாற வேண்டும். அந்தளவு தேர்வெழுதிய அனுபவம் நமக்கு கைகொடுத்திருக்க வேண்டும். பாடங்களை கண்முன் நிறுத்தியிருக்க வேண்டும். அப்போது தான் தேர்வு குறித்த பயம் நீங்கும்; தைரியம் பிறக்கும்.ஒரு டிகிரி படித்து விட்டோம்; வேலை தேடுவோம் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. தேர்வு செய்யும் வேலைக்கு நீங்கள் தகுதியாக இருக்க டிகிரியை தாண்டிய திறன்கள் முக்கியம்.

கூடுதலாக உங்களுக்கு என்ன தெரியும் என்பதையே எதிர்பார்க்கின்றனர். எனவே, ஒவ்வொரு நாளும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டு விட்டால், காலம் தாமதிக்காமல் உடனே அதற்கான செயல்களில் இறங்கிவிடுங்கள். ஒருவேளை, நேர்காணலுக்கு செல்கிறீர்கள் என்றால், உங்கள் ரெஸ்யூம்ல் விஷயம் இருக்க வேண்டும். பயோடேட்டா வேறு; ரெஸ்யூம் வேறு. சுய விபரம் என்பது பயோடேட்டா; கூடுதல் விபரம் என்பது ரெஸ்யூம்.பிளஸ் 2 முடித்து இருக்கிறீர்கள்; எக்ஸல், வேர்டு, பவர்பாயின்ட் அட்வான்ஸ் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தாலும், அடிப்படை கம்ப்யூட்டர், சாப்ட்வேர் தெரிந்திருக்க வேண்டும்.

சமூக வலைதளக் கணக்குகளுக்கு வாருங்கள். டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்டு இன், சாட் ஜிபிடி-ல் நல்லதை தேடுங்கள்.உலகளவில், ஆராய்ச்சி படிப்பு குறித்து தெரிந்து தேடல்களில் இறங்குங்கள். சான்றிதழ் படிப்பு தான் வேலைவாய்ப்பை உறுதி செய்யும். சென்னை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பொருளாதாரம் சார்ந்த படிப்பு, பருவநிலை மாற்றம் குறித்த படிப்பு மவுசு பெறுகிறது.

புவியியல், வரலாறு, டேட்டா சயின்ஸ் அனைத்திலும் புத்தாக்கம் ஏற்பட உள்ளது. உங்களிடம் புதுமை இருந்தால் தான் நீங்கள் வேலைக்கு எடுபடுவீர்கள்.சாதிக்க வேண்டும்; ஜெயிக்க வேண்டும்; வெற்றியாளராக மாற வேண்டும் என்றால், உண்மையுடன் படிக்க வேண்டும்; படிப்பு ஒரு தொடர் பிராசஸ். புதிய தொழில் கொள்கைகளை அறிந்து கொள்ளுங்கள்.

டிகிரி ஒருபுறம் இருந்தாலும், சிவில் சர்வீசஸ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதுங்கள்.ஊரும், உலகமும் ஆயிரம் சொல்லும். ஆனால், படிப்பும், வாழ்வும் உங்களுக்கானது; நீங்கள் தான் சரியான வழியில் பயணிக்க வேண்டும். பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு உதவ வேண்டுமெனில் வெறித்தனமாக படியுங்கள்.

வேலைக்குத் தேர்வாக வேண்டுமா... நீங்கள் எந்த வகையில் சிறப்பானவர்?



நீங்கள் தொழில்முனைவோராக ஒரு நிறுவனத்தைத் துவக்குகிறீர்கள். நேர்காணலில் உங்கள் நிறுவனத்துக்கு ஒன்றுமே தெரியாத ஒருவரை தேர்வு செய்வீர்களா? அவரை நம்பி பொறுப்புகளை கொடுப்பீர்களா? அதேபோல், உங்களை தேர்வு செய்யும் நிறுவனம், வேலைக்கு தேர்வு செய்ய நீங்கள் என்ன வகையில் சிறப்பானவர் என்பதை ஆராயும்; அதன் பின்பே தேர்வு செய்யும்.எக்காரணம் கொண்டும் கல்லுாரி பிராஜெக்ட்களை காசு கொடுத்து வாங்காதீர்; நீங்கள் ஆராய்ந்து பிராஜெக்ட் செய்யுங்கள். தோல்வியில் இருந்து தான் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us