UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM
ADDED : ஜூன் 11, 2024 08:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு கேரளாவில் உள்ள பள்ளிகள் கடந்தவாரம் திறக்கப்பட்ட நிலையில், பாலின சமுத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடுவது போன்ற படங்களுடன் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாலின நடுநிலைமை குறித்து குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதை நோக்கமாகக் கொண்டு, தந்தை சமையலறையில் தேங்காய் துருவுவதும், மகளுக்கு சிற்றுண்டி சமைப்பதும் போன்ற படங்கள் அம்மாநில பள்ளி பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன.
மாநில பொதுக் கல்வி அமைச்சர் சிவன்குட்டி, பாடப்புத்தகங்களில் இருந்து ஒரு பக்கத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததை அடுத்து, அத்தகைய புதுமையான பாடத்திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.